வாழத் துடிக்கிறேன்
மேகத்தோடு செல்கிறேன்
மேகம் என்னோடு சேர்ந்து வர
மேகலையாய்
மேடை நடனம் புரிகிறாள்...!
மழைத் துளிகள் விழுகிறது
மழை என்னோடு வர
மழையில் நடனமிசைத்து
மழைக் காசுகளை வாரி இறைக்கிறாள் ..!
தென்றல் வீசுகிறது
தென்றல் என்னோடு வர
தென்றல் இதமாய் ரசித்து வருணனையோடு
தென்றல் கீதம் பாடுகிறாள்...!
கோயில் திருவிழாவில்
கோயில் கோபுரங்களோடு
கோயில் கலசங்களோடு
கோயில் மணியோசையில் இசை சேர்த்து வர்ண ஜாலம் புரிகின்றாள்...!
கரங்கள் அனைத்தும் தாளமிடுகிறது
கரங்களின் விரல்கள் வித்தையில்சேர்த்தணைத்து தானே வணங்குகிற காட்சியோடு என்னையும் அறியாமல் ...இந்த ஜென்மத்தில்
இவர்களோடு வாழத் துடிக்கிறேன் ..
என்று கூடுமோ ..!