மழையே...!

உன் வருகையின் போது
கருமேகங்கள் சூழ்ந்தன
மின்னல் மின்னியது இடி முழங்கியது
அரச வரவேற்பு போல
மண் வாசம் வீசியது
மயில்கள் தங்கள் தோகைகளை விரித்து ஆடியது
நீ வானுலகத்திற்கும் பூலோகத்திற்கும்
தூதுவராய் செயல்படுகிறாய்
உன் முதல் துளி என் மேல் விழுந்தது
சில நொடிகளிலே என் உடை முழுவதுமாய் நனைந்தது
நீ வாடிய பயிர்களுக்கு நீர் அளித்தாய்
விவசாயிகளின் கண்ணீரை துடைத்தாய்
நான் குடிபதற்கு நீர் அளித்தாய்
மற்றும் பல உயிர்களின் தாகத்தை தீர்த்தாய்
உன் தேக்கத்தில் கப்பல் விட்ட
சிறுவர்களை உற்சாகம் அடையவைதாய்
படிப்படியாக குறைந்தாய்
பின் முற்றிலுமாக நின்றாய்
நீ சென்ற பின் புல்களில்
இருந்தது உனது முத்து போன்ற நீர் துளிகள்
நீ சென்றாலும்
எங்கள் மனதில் நிற்கிறாய் வானவில்லாக!
_-_- _-_ஹரிகரன் _-_-_-_

எழுதியவர் : ஹரிகரன் (7-Feb-13, 5:34 pm)
பார்வை : 163

மேலே