கணக்கு vs அன்பு
கர்த்தருக்காய் வாழ்ந்திருந்தால்
கவலை,கஷ்டம் வாராதே!
நான்
"கணக்கு" போட்டே வாழ்ந்துவிட்டேன்!
கழித்தல்,கூட்டல்,பெருக்கல்,வகுத்தல் என
ஆனால்
தேர்ச்சி மட்டும் ஆகலையே!
மாயையான வாழ்வினிலே
மார்தட்டி நிற்கும் மனிதரோடு
தினம்
மல்லுக்கட்ட வைத்தவரே !
உம அன்பு ஒன்று போதுமே!
உலகை என்றும் நான் வெல்ல ,
எனை
அரவணையும் அன்பு தெய்வமே!