அம்மா

ஏண்டியம்மா பெத்துப்போட்டே ?
ஜேம்ஸ் அம்மா பெத்தவளே!
என்ன...
ஏண்டியம்மா பெத்துபோட்டே?
இன்குபேட்டரில் வைத்து
நீ
காப்பாத்திபுட்ட!
எளவு ஒன்னு உலுந்திடாம
இரவு,பகல் கண்விழிச்ச !
பாலும்,தேனும் ஊட்டி வளர்த்து
பாவி என்னை
பார் அறிய பார்த்துக்கிட்டே!
வறுமையின் வலி கண்டு நீ அழுவ!
அழுகிற உன்னை பாரக்கையில
காரணம் புரியாம நான் அழுவேன் !
வந்த கண்ணீர் நான் மறக்க
உன் கண்ண , நீ துடைச்சு
"சுமை" எல்லாம் நீ தாங்கி
கவலையெல்லாம் மனசோடு அமுக்கிடுவே !
அறிஞர் .அண்ணாவின் பொறந்தநாளில்
பிறந்த என்னை
குட்டி கவிஞனாவும் வளர்துப்புட்டே!
உன் மடியில் தவழ்ந்த காலம்
மீண்டும் எனக்கு வந்திடுமோ ?
மண்டியிட்டு கேட்கிறேன் காலமே !
அந்த
நிகழ்வுகளை
என் மனதை விட்டு
என்றும் நீக்கி விடாதே !
இத்தகைய
என் தாயை வாழும் போதே
நித்தம் ,நித்தம் வணங்கிடுவேன் !
நல்லதொரு தாயின்
அருமை புரிந்தவனாய் !

எழுதியவர் : அபி. (8-Feb-13, 9:21 pm)
சேர்த்தது : G.Anto
Tanglish : amma
பார்வை : 136

மேலே