என் பெற்றோர்

என்னை பத்து மாதம்
சுமந்தாள் - தாய்
என்னை இன்று வரை
சுமந்து கொள்கிறான் என் - தந்தை

தூய்மையான - அன்பு
போலியற்ற - அக்கறை
நேர்மையான - வழிகாட்டல்
நியாயமான - சிந்தனை
நேசிக்கத்தக்க - உபசரிப்பு
மாறுதலில்லா - நம்பிக்கை
காயங்களற்ற - வார்தை
கம்பீரமான - அறிவுரை
கலங்கமில்லா - சிரிப்பு
உண்மையான - அழுகை என
அத்தனையும் உளமகிழ்ந்து
செய்து வளர்த்தவர்கள்
என் பெற்றோர்...

தோழிக்கு தோழியாய்
தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுத்தவர்கள்
என் பெற்றோர்..

என் பெற்றோர் போல்
சிறந்தவர்கள் கிடைப்பது
அரிதுஅந்ந வகையில்
நான் அதிஷ்டசாலி...

எழுதியவர் : naseeha (8-Feb-13, 10:59 pm)
பார்வை : 4415

மேலே