இது வேண்டும. அது வேண்டாம்
.
வீடொன்று சொந்தம் வேண்டும்.
காடழிக்க வேண்டாமய்யா.
கழனி செய்யக் காணி வேண்டும்.
வீடதிலே வேண்டாமய்யா.
நதிகளல்லாம் இணையவேண்டும்.
நாட்டில் பஞ்சம் வேண்டாமய்யா.
நாடொன்றாய் ஆகவேண்டும்.
நமக்குள் சண்டை வேண்டாமய்யா.
விவசாயம் வாழவேண்டும்.
வெட்டிச் செலவு வேண்டாமய்யா.
தொழில் வளம் பெருக வேண்டும்.
தூரம்போக வேண்டாமய்யா.
தானியங்கள் பெருக்க வேண்டும்.
தரிசுபோட வேண்டாமய்யா.
ஏற்றுமதி சிறக்க வேண்டும்.
இறக்குமதி வேண்டாமய்யா.
அன்புள்ளம் இருக்க வேண்டும்.
அன்பில்லம் வேண்டாமய்யா.
தன்னிறைவு ஆக்க வேண்டும்.
வன்மையேதும் வேண்டாமய்யா.
தன்மனைக் காதல்வேண்டும்.
பிறன்மனை வேண்டாமய்யா.
தேவைகள் சமம் வேண்டும்.
காவல்கள் வேண்டாமய்யா.
நியாயங்கள் நெஞ்சில்வேண்டும்.
நீதிமன்றம் வேண்டாமய்யா.
சத்தியம் போற்ற வேண்டும்.
சட்டங்கள் வேண்டாமய்யா.
வேதங்கள் படிக்க வேண்டும்.
பேதங்கள் வேண்டாமய்யா.
பண்பினைப் பழக வேண்டும்..
பாவங்கள் வேண்டாமய்யா.
சமுதாயம் ஒன்று வேண்டும்.
சாதிகள் வேண்டாமய்யா.
சங்கேதமாய் மொழி வேண்டும்.
சச்சரவு வேண்டாமய்யா.
சமத்துவம் அடைய வேண்டும்.
சலுகைகள் வேண்டாமய்யா.
எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்.
இல்லாமை வேண்டாமய்யா.