அவதார கவி
மார்கழி வசந்தமாய்......
என்னில் ஊடுருவி... இதயத்தை களவாடியதுமட்டுமல்லாமல்
அதை கொன்று போட்ட நீ , இன்று கவிப்பேரரசின் வாரிசு போல காதல் கவிபுனையும்
வித்தகம் கற்றது எப்போது?
உணர்வைகொன்று ,உயிரை எடுத்து, மனிதம்தின்ற நீ....
காதல் மொழி கொஞ்சும் கவிதை படைக்கும் விந்தை எனக்கு இன்றும் புரியாத புதிர்.
காதலின் புனிதம் இன்று உன்னால் தீட்டுப்பட்டு தெருவில் நிக்கும் அவலம் ....
மாதவிக்கும் கற்புண்டு என்று வாதிக்கும் இத்திரு நாட்டில்.......
உனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று தேடுகிறேன் அகராதியில்....
கிடைக்கவில்லை இதுவரை, ஒருவேளை தமிழ் பெரியோர்கள் இதுவரை காணாத
ஒரு பாத்திரம் நீ என்பதாலோ...? நல்லவேளை மீசைக்காரகவிஞன் உயிரோடில்லை
இன்று.... அவன் சொன்ன புதுமையை மாற்றியமைத்த உன்போன்ற உத்தமிகளை
காண.
காலன், யானைக்குபதிலாய் உன்னுருவில், அவனுயிரை எடுத்திருப்பான் இன்று !