ஓவியப்பாவையாய்...

மழைச் சிறு துளியில்
ஒளிக் கதிரவன்
தூரிகை வீச்சுப் பட்டு...
வியத்தகு பெரும்படைப்பாய்
வளைந்தெழுந்தாள்
வானவில் தேவதை...
வண்ணங் கொண்டு,
எண்ணம் வென்று,
கண்கள் நிரப்பிய
ஓவியப்பாவையாய்...

---கீர்த்தனா---

எழுதியவர் : கீர்த்தனா (11-Feb-13, 4:06 am)
பார்வை : 144

மேலே