நீதான் என் உயிரென....
உன்னை விரும்புகிறேன்
என்றேன்!-எனக்கு
விருப்பமில்லையென்று
முன்னெச்சிரைக்கையாய்
மறுத்துவிட்டாள்!
எங்கே.....இவனை விரும்பிவிடுவோமோ
என்ற பயத்தில்!
உன்னை காதலிக்கிறேன்
என்றேன்!-எனக்கு
உன்மீது காதலில்லையென்று
முன்னெச்சிரைக்கையாய்
மறுத்துவிட்டாள்!
எங்கே......இவனை காதலித்துவிடுவோமோ
என்ற பயத்தில்!
பொறுத்திருந்தேன் சிலநாள் ....
முடியவில்லை என்னால்..
.
பொங்கி எழுந்தேன் ஒருநாள்...
என்
உயிரை விடபோகிறேன்
என்றேன்! - நீதானே
என் உயிரென
முன்னெச்சிரைக்கையாய்
அன்றுதான்
முதன்முதலாக என்னை
தடுத்தாள் அவள்!
புரிந்துகொண்டேன்....
புரியாமலே இருந்த
அவள் மனதை
அன்றுதான்
புரிந்துகொண்டேன் !