பேருந்துப் பயணங்களில்....
என் வாழ்க்கைப் பயணத்தில்...
தினமும் பேருந்தில் பயணிக்கிறேன்...
அப்போது காணும் காட்சிகள் யாவும்..,
உன் நினைவால்...
உன்னையே காட்டுகின்றன எங்கெங்கும்...
எதிர்வரும் கார்மேகங்களின் கூட்டங்களில் உன்முகம்
ஓர் ஓவியமாய் வரையப்பட்டதாய் பிரமை என்னுள்...
சூரிய ஒளி பார்க்கையில் உன் கண்களின் சிரிப்பின் பிரகாசம் வந்து போனது
என் மனதுள்...
தழுவிச்செல்லும் தென்றலின் வாசம் நுகர்கையில் நீ சூடும் மலர்களின் வாசம் உணர்ந்தேன் நான்...
கடந்து செல்லும் கரிசல் காட்டின் பொன்னிற மலர்களும்...
கன்னி உன் கார்கூந்தல் சூடிய மலர்களாய் என் மனதுள்...
பச்சைப் புல்வெளிகளைப் பார்க்கையில் உன் பள்ளிச்சீருடையின் வண்ணம் என் கண்களில்...
காணும் காட்சிகள் யாவும் உன்னை நினைவுபடுத்தினாலும்..
கடமைக் காட்சிகள் கண்முன்னே வந்து உன் நினைவுகள் கலைக்கின்றன.,.
பின்னோக்கிச் செல்லும் மரங்களும் காட்டுகின்றன...
நீ எனைப் பிரிந்து செல்வதாய்...
முந்திச்செல்லும் வாகனங்களும் உணர்த்துகின்றன...
நீ என் முன்னால் செல்வதாய்...
பேருந்திலிருந்து இறங்கும் இடமறிந்த நான்...
என் காதலை சொல்லிடும் வழி தெரியாமல்...
என் கற்பனைகளில் பயணிக்கிறேன்...
என் காதலெனும் பேருந்தில்...
உன் மனம் என்னும் ஊரை நோக்கி...!