காதல்!

ஒற்றை சந்திப்பில் பறிபோனது
உயிரும்,மனசும் ஒருசேர
நீ கிழக்கு தேசத்து கிளியோப் பட்ராவா
வடபுலத்து வகுப்பறை தோழியா
அனுமானிக்க முடியவில்ல ஆரணங்கே
சரி..
திருடிய இரண்டில் ஒன்றையேனும்
திருப்பிக் கொடு
அவஸ்தை பட்டு கழிகின்றன
என் இன்றைய இரவுகளெல்லாம்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.