இன்றைய காதலர் தினத்திலாவது.......{{இமாம்}}

காதல் புனிதாமான பூங்காவனம் ,
நல்ல புத்தகம் ஒன்றுக்கான முகவுரை,
நல்ல நண்பனொருவனின் வாழ்க்கைக் குறிப்பேடு என பல உதாரணங்களை காதலுக்காக என்றே அடிக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் காதலில் மாற்றங்களை ஏற்படுத்தும் மனிதர்களும் உண்டு காதல் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களும் உண்டு.
காதலில் மாற்றங்களை ஏற்படுத்துவோர்கள் வேண்டாக் காதலர்கள்
காதல் ஏற்படுத்திய மாற்றதாரர்கள் உண்மைக் காதலர்கள்.
அவர்கள் இறுதி வரை காதலர்களாகவும் உண்மையின் தரிசன தாரிகளாகவும்
காதல் சிம்மாசனங்களில் உட்கார்ந்து பன்னெடுங்காலம் ஆட்சி செய்யும் காதல் இளவரசர்களாகவும் காலத்தினால் குறித்துக் காட்டப் படுவது வழக்கம்.
இவர்களைப் பற்றி சிந்திக்கத் தேவை வராது.
என்றாலும் இந்தக் காதலர் தினம் சந்தோசத்திற்காக கொண்டாடப்பட வேண்டியதாக இருந்தாலும்
காதல் எனும் கற்கள் தீண்டி அதனால் ஏற்பட்ட ரணங்கள ஆராமல் ரணங்களை உள்ளிழுத்து ஊமையாகக் குந்திக் கொண்டிருக்கும் காதலர்களின் வரலாறுகளை அரங்கேற்ற வேண்டியதுதான் தான் இந்தப் புனிதமான நாள் .
அவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து புது மணம் பூசி புன்னகை செய்விக்க வேண்டும் என்ற அவசியமும் நிலைப்பாடும் கிடையாது.
காதலர் தினத்தன்று வாழ்வியலை தோற்று விட்டு பைத்தியகாரர்களாக அலையும் காதல் மேதைகள் அவர்கள் அவர்களுக்கு பிச்சை போட வேண்டிய அவசியமும் இல்லை.
கைகொடுத்து கலாயிக்க வேண்டிய அவசியமும் இருக்கத் தேவையில்லை.
உண்மையில் மிக முக்கியமாக இன்று பேசப்பட வேண்டிய கர்த்தாக்களும்,
பாடப்பட வேண்டிய கருப்பொருளும் அவர்களே. அவர்கள் காதல் ஏழைகள்தான்.
ஏழைகள் என்றாலே எமக்குப் பிடிக்கும் ஆனால் அவர்ளைப்பற்றி சற்று நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்.
அவர்களுக்ககாக நாங்கள் காவியங்கள் படைக்காவிட்டாலும் அவர்களை நிம்மதிப் படுத்தும் எத்தனையோ இலக்கிய வகைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஞாபகப்படுத்தும் வழிவகைகள் செய்வோம்.
காதலில் விளையாடப்படும் அந்த கண்ணாமூச்சி ஆட்டங்களையெல்லாம் இன்றோடு நிறுத்தி காதல் என்பது விளையாட்டுக்கான பாத்திரமல்ல வாழ்வியலுக்கான தேர்வு என்பதையும் காதல் கேலிக்கைகாரர்களின் பூதாகாரச் சீண்டியல்ல புனித வேதநூல்களின் தொகுதி அது என்பதையும் உணர்ந்திடச் செய்வதன் மூலம் .....
இனி வரும் காலங்களில் காதல் மோசடிகளைத்தவிர்த்து விமோசனம் கிடைக்கக் கூடிய நம்பகமான காதலர்களை உருவாக்குவோம் காதல் வியாபாரப் பேட்டைகள் அல்ல என்பதை உணர்த்தி
காதலானது நல் விருட்சங்களின் வேர் அவற்றின் அடியில் நீரூற்றி அவை செழித்து வளர வழி சமைப்போம்.
இது தொடரும் .....
இது பற்றிய உங்கள் கருத்துக்களின் பின்னர்.
அன்புடன் இமாம்.