நீ இல்லாமல் ...

முழுதாய் ஒன்றிணைந்து நான் உனக்கே என்று ஆன பின்பு .... என்னிடம் வெறுப்பதற்கு என்ன தான் இருக்கப் போகிறது ....?
உன் கோபம் நம் நினைவுகளைக் கசக்கி எரிகிறது..
உன் முகம் பார்க்காத விழிகளும்
உன் விளையாட்டுப் பொய்களைக் கேட்காத செவிகளும் துடி துடிக்கிறது....
இரவு பகலாய் நாம் மட்டுமே பேசி நாட்களை நகர்த்தியது எல்லாம் உண்மை தானா ?
இன்று உன்னைத் தொடர்பு கொள்ளவே என் மனம் நடுங்குகிறது....