என்னுள் ......

பண்ணையார் பரமசிவம் வீட்டின் உள்ளே நுழைய ..வேலையால் கதிர் வீட்டில் இருந்து வெளியானான் .
கதிர் பண்ணையாரை பார்த்து கும்பிடு போட்டான்.
.
தலை அசைத்து விட்டு ...கை'ல என்னடா சாவி ....

தோட்டத்து வீட்டுக்கு போறேன் ஐயா ..நெல்லு எடுக்க வராங்க ..

சரி ..என்று உறுமி விட்டு நகர்ந்தார் .....

பார்வதி ..பார்வதி ...எங்கடி இருக்க ?

ஏன் கத்துறீங்க ..இங்க தான் இருக்கேன்...

உன்கிட்ட எத்தன தடவ சொல்றது ..கதிர் வந்தா சாவி நீ போய் குடுணு..வீட்டு உள்ள ஏன் வரான்...

என்ன பேசுறீங்க உள்ள நான் வேலையா இருந்தேன் .அதான் உள்ள வந்து எடுத்துட்டு போக சொன்னேன்.இதுல என்ன தப்பு ..

இங்க பாரு எது தப்பு ..எது சரின்னு கேள்வி கேட்காத சொல்றத மட்டும் செய் ...

.நான் எப்ப இந்த வீட்டுக்கு மருமகளா வந்தனோ ..அன்னைலந்து அவன சின்ன குழந்தைலந்து தெரியும் .
.
சரி ..விடு ..எங்கடி உன் செல்ல புத்திரன் ...

.மேல் ரூம்ல தான் இருக்கான் ..இப்ப ஏன் அவன தேடுறீங்க? ..

கொஞ்சறதுக்கு...நாலு கழுதை வயசாகுது ...ஊரு முழுக்க சண்டை போட்டு வர சொல்லு ....

என்ன செஞ்சான் ...கேட்டுகிட்டு இருந்த பார்வதி மயங்கி விழுந்தாள்.

மூச்சி பேச்சி இல்லாமல் இருந்த பார்வதியை ..அவரும் ,பையனும் மருந்துவரிடம் தூக்கிகொண்டு சென்றார்கள் ....

பார்வதியை பரிசோதித்த மருத்துவர் ரொம்ப பலகீனமா இருகாங்க ..இங்க ஒரு வாரம் இருக்கட்டும் ..பார்க்கலாம் என்றார் ...

விஷயம் கேள்விப்பட்டு கதிர் ஓடோடிவந்தான்...
.
ஐயா அம்மா இப்ப எப்படி இருக்காங்க ...

நல்லா இருகாங்க ..வேண்டா வெறுப்பா சொல்லிவிட்டு சென்றார் ...

கதிர் பண்ணையார் மனைவியை பார்த்துவிட்டு சென்றான் ..
ஒரு வாரம் சென்றது ..பார்வதி உடல் நிலை மோசமாகி கொண்டே வந்தது
...
டாக்டர், பரமசிவத்திடம் ..இனி இவுங்கள இங்க வச்சி பார்க்கறது சரி இல்ல ..டவுனுக்கு கொண்டு போங்க ..

சரி டாக்டர் ......
பார்வதியை டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் ...

அவளை பரிசோதித்த டாக்டர் ..இவங்களுக்கு ரெண்டு கிட்னியும் வேலை செய்யல ..யாராவது கிட்னி தானம்மா கொடுத்தா தான் இவங்க பொழைபாங்க

நான் கொடுக்கிறேன் டாக்டர் ..என்றார் பரமசிவம்


டாக்டர் சிரிப்புடன் தாரளமா..உங்களுது ,உங்க பையனுது சேர்ந்தா கொடுக்கலாம் ..வாங்க செக் பண்ணலாம் ..

மன்னிக்கணும் பரமசிவம் உங்க ரெண்டு பேரோடதும் பொருந்தாது ..

டாக்டர் பணம் எவளுவ் வேணும்னாலும் தரேன் காப்பாத்துங்க
...
பரமசிவம் நாங்க எங்களால முடிஞ்சத பண்றோம் ..நீங்க உங்க சொந்தகாரங்க நண்பர்கள் கிட்ட சொல்லி பாருங்க ..கடவுள் இருக்கான் கவலைபடாதீங்க ...

இதை கேட்டு கொண்டு இருந்த கதிர் டாக்டர் நீங்க சொல்றது எனக்கு புரியல எங்க ஐயாவோட அம்மா பொழைகனும் நான் தரேன்..

டாக்டர் அவனுக்கு புரியவைத்தார்..இப்ப செக் பண்ணி பார்க்கலாம் சேர்ந்தா நல்லது ...

சிரிப்புடன் டாக்டர் சொன்னார் பரமசிவம் உங்க மனைவிய காபத்திடலாம் இவரது சேருது ..
..
பரமசிவம் கையெடுத்து கதிரை கும்பிட்டார்..உனக்கு எவளுவ் பணம் வேணும்டா சொல்லு ...
ஐயா மன்னிக்கணும் பணம் கொடுத்து என்ன பெரிய ஆளா ஆக்காதீங்க ...என்னோட அம்மாக்கு இப்படி ஆனா விட்டுட்டா போவேன் ...பணம் எல்லாம் வேணாம் ஐயா ...நான் நானாக இருக்கேன் ..கவலைபடாதீங்க ..அம்மா பொழசிப்பாங்க
பண்ணையார் கைகள் கும்பிட்டபடியே இருந்தது..

பிழைத்துவந்து ..விபரம் அறிந்த பார்வதி கணவனிடம் கேட்டாள்...கதிரு வீட்டு உள்ள வந்துட்டு போனதுக்கு கோபம் வந்துச்சே இப்ப அவன் என்னுள் இருந்து உயிர் தந்தானே ..இனி நான் வீட்ல இருக்கலாமா?

பரமசிவத்துக்கு எதையலோ அடித்தது மாதிரி இருந்தது ..

எழுதியவர் : sjv (15-Feb-13, 7:34 pm)
சேர்த்தது : rajakiln
Tanglish : ennul
பார்வை : 173

மேலே