தன்னிறைவை பழகிக் கொண்டேன்
மலர்களை பார்ப்பதற்கு முன்
மகிழ்ச்சியை தேடிக் கொண்டிருந்தேன்
மலர்களை பார்த்த பிறகே
மகிழ்ச்சி உருவாக்கப் படுவதை உணர்ந்தே
பூக்களைப் போல இப்போது
புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்.....
பூவே......உன்னிடமிருந்தே நான்
தன்னிறைவை பழகிக் கொண்டேன்