நினைத்திருப்போமா???

நினைத்திருப்போமா???

என்றும் சந்திக்காமல் இருந்தும்
என்றாவது சந்திப்போமா ??
இவன் யாராக இருந்திருந்தாலும்
என்னதான் பேசிவிட்டிருந்தாலும்
வருகிறேன் என்று வாக்குகள்
கொடுத்து தப்பியிருந்தாலும்
எங்கிருந்தாலும் நினைத்திருப்போமா ???
காலம் கனிந்தால் வந்துவிடுகிறேன்
கட்டித்தழுவி அழுதுவிடுகிறேன்
கரையரியா ஓடமல்ல சிநேகம்
இடையூறுகள் கொண்ட பயணம்
அதனாலோ என்னவோ இப்படி
இனிவரும் நாளில் இருக்குமோ
அறியவில்லை இதுபோல் ஒரு மன நெருக்கடி
இனியும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்
உம்மோடு மட்டும்தான் உண்ணும்
உணவு ஒருக் கைப்பிடி

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (15-Feb-13, 11:59 pm)
பார்வை : 136

மேலே