மனிதநேயமும் செத்துப்போனது பார் ..!

மனிதன் மறந்த
மனித நேயம்!
கண்களை குருடாக்கி
வழி சொல்லும்
வினோத மக்கள்.

வீதியில்
வேடிக்கையாய் கூட்டம்.
நடப்பது நாடகமல்ல
நம் மனதை உலுக்கும்
கொடூர சம்பவம்.

ஒருவனை
சிலர் துரத்த -பலர்
பார்வையாளர்களாக
படுகொலை நடந்தோ்கிறது
மக்கள் பலர்
சாட்சியோடு.

தடுக்கும்
எண்ணமும் இல்லை
யாரும்
தடுக்கவும் இல்லை

உச்சி கொட்டி
வெட்டி பேச்சில்
வீணடிக்கும் இந்த
மக்கள் மத்தியில்
தேடி தேடி
ஓடினேன் கிடைக்காத
மனித நேயத்தை!

ஏன் இப்படி - என்ற
கேள்வியோடு
கேள்விகுறியான
மனித நேயத்தை
நினைத்து!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (15-Feb-13, 9:16 pm)
பார்வை : 194

மேலே