!!!விழிகளின் சந்திப்பு !!!
என் விழிகளின் பல
வருட தவங்களுக்கு
வரமாக கிடைத்தது
உன் ஒரு நொடி பார்வை !!!
உயிரற்று கிடந்த என்
இதயம் துடிக்க தொடங்கி
விட்டதடா உன் பார்வையால் !!!
உன் இதழ்கள் எனக்காக
என்னிடம் வார்த்தைகளை
உதிர்க்காத என ஏங்கி கொண்டிருந்ததது
என் இதயம் !!!
உன் பார்வை என்னிடம்
பேசிவிட்டு சென்றது
நம் விழிகளின் சந்திப்பில்
உன் காதல் மொழிகளை !!!
என்னவென்று சொல்வதடா
உன் விழிகள் என்னை தீண்டி
சென்ற நொடிகளின் சந்தோசத்தை !!!
மௌனமாய் பல வருடம்
காத்திருக்க வைத்தாய் !!!
உன் பார்வையால் என்னை
பேச வைத்தாய் !!!
உன் விழிகளுடன் -ஒரே நொடியில் !!
உன் வார்த்தைக்காக காத்திருந்தேன்
பல வருடங்கள்
நம் காதல் நினைவுகளுடன் !!!
நம் விழிகளின் சந்திப்பு
பதில் சொல்லி சென்றதடா
என் பல வருட தவங்களுக்கு !!!
காதலுக்கு சொந்தம்
பார்வையின் மொழிகள் தானே !!!
உணர வைத்ததடா உன் விழிகள் !!!
பார்க்கமலே பேசி கொண்டது
நம் இதயங்கள் -நம்
விழிகளின் சந்திப்பால் !!!
காதல் வலிகள் மட்டுமே
எனக்கு சொந்தமென நினைத்து
காலங்களை கடந்து வந்தேன் !!!
காதல் காயங்களை தந்தவனே
உனக்கு சொந்தமடி என
சொல்லி சென்றதடா உன் விழிகள் !!!
தனிமையில் அமர்ந்திருப்பேன் ...
நொடிக்கு ஒரு முறை உன்
நினைவுகளுடன் பேசிக்கொண்டு !!!
வார்த்தையால் காதலை
பரிமாறிக்கொள்ளமுடியவில்லை
என்றாலும் பார்வையால் பேசிக்கொண்ட
போது உயிர் பெற்றதடா-உன்
நினைவாய் துடித்து கொண்டிருந்த
என் இதயம் !!!!