ஆயிஷாபாரூக்

தெளிந்த மனமுடன்
தேங்காத நதியாய்
வாழ்க்கை கடலில்
எதிர்நீச்சல் அடித்து
பொறுமை ஆயுதமுடன்
எதிர்வரும் ஏளனங்களை
நிலம்போல பொறுத்து
தீமைகளை தீயன
மனச்சுடரில் எரித்து
துணிவோடு எதிர்த்து
மடமையை அழித்து
அறிவுடன் செழித்து
கவலையை காற்றில்
பட்டம்போல பறக்கவிட்டு
மனமதை திடமுடன்
வருவதை சந்தித்து
பரந்த வான்போல
வாழ்வை விரிவாக்கி
மகிழ்ச்சியை பெருக்கி
கவலைகளை சுருக்கி
வாழ்கிறேன் நான் ஒரு
திறமையான நங்கையாக!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (17-Feb-13, 1:56 pm)
பார்வை : 186

மேலே