சிரிப்பு ஒரு உண்டியல்
உண்டியலாய் இருக்கிறான்
அந்த சிறுவன்.
உண்டியல் உடைக்கப்படுகிறது.
சிரிப்பு சில்லறையாய்
சிதறி விழுகிறது
அந்தச் சிறுவனிடமிருந்து
உண்டியலாகிக் கொண்டிருக்கிறது
அந்தக் கல்லறை.
சில்லறைகள் விழுவதால்.
சிலைகள் செதுக்கப்பட்டாலும்
சிதைக்காமல் சிரிக்கின்றன
பிறர் மனதை.
சிரிப்பு பற்களின் ஓரம்
பதுக்கப்படுகிறது.
உண்டியலாகிக்கொண்டிருக்கிறது