என் காதல் கவிதை
உன் சின்ன சிரிப்பால்
என்னை சிதைத்த நீ
என்னை விட்டு விலகியும்
உன் நினைவுகளில் என்
இதயத்திலிருந்து விலக மறுத்துவிட்டாய்
விலகிச்சென்ற நீ
விதண்டவாத பிடிப்போடு
விளக்கங்கள் ஏற்றுகிறாய்
நினையுகளில் நின்மதி கேட்டு உன் நினைவுகளுடன் துடிக்கிறது என் இதயம்
உன் புன்னகை பூக்களில் நனைந்த நான்
உனக்கே புரியாமல் புதைந்துவிட்டேன்
உன் காதல் கவிதைகள் உன் அருகே வந்து
அதிர்த்து துடிக்கிறது
கொஞ்சம் உன் செவிகளை என் கவிதைக்கு இரவல் கொடுத்து என் கவிதையை கேட்டுபார்
என் கவிதையை கேட்டுப்பார்
என் இதயப்புத்தகத்தின் சோகங்களை சொல்லியே துடிக்கும்
மலையிலே உன்னைத்தேடி மயானத்தின் மறு பக்கம் செல்கிறேன்
முற்றுப்புள்ளி இட்ட என் வாழ்க்கையில்
என் இதயத்தின் முதல் பக்கத்தில் முதல் நினைவு உன் நினைவுதனடி
அலைய வைத்த நீ அறியாத உன் காதல்
எனக்கு புரியாமலே போய்விட்டது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
