வாழ்வியற் குறட்டாழிசை. 5 (அன்பு.)
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்வியற் குறட்டாழிசை. 5
அன்பு.
மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.
அன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.
உண்மை அன்பு எத்தனை திண்மைத்
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.
உண்மை அன்பு ஒருவனுக்கு யானை
பலம் தரும் சக்தியுடைத்து.
அன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.
மழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத ஜீவசக்தி அன்பு.
எத்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.
கரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).
அன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.
அன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.
வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-5-2011.