விண்ணில் மாட்டிய ஊஞ்சல் கயிறு....!

விழுகின்ற மழைத்துளிகள்
விண்ணில் மாட்டிய ஊஞ்சல் கயிறு....!

விளையாடி நான் அமர
விரிந்து மலர்ந்த தாமரைப்பூ......!

தள்ளி என்னை தாலாட்ட மெல்ல
தாவி வரும் தென்றல் காற்று....!

மண்வாசனை சுவாசமாக
மனம் தனிலே தமிழ் அமுதூட்டும்...!

அ-----ழகு பட சிரிப்பதற்கே
ஆ----யுள் முழுதும் நேரமிருக்கு......
இ-----ன்பமுடன் ரசிப்பதற்கே
ஈ-----ரெட்டு திசை விரிந்திருக்கு.......
உ-----லகமெந்தன் விரல் நுனியில்
ஊ----ரெங்கும் உறவினர்கள்
எ-----திர்படுவது தெய்வங்கள்
ஏ-----காந்தம் எந்நாளும்
ஐ-----ஸ்வர்யம் கதிர் கொடுக்கும்
ஒ-----ற்றுமையான நினைவுகளால்
ஓ---ர் உலகம் கவி உலகம்....
அ----வ்வாறே சுகம் தருதே
இ-----க்தே நம் எழுத்துலகம்......!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (19-Feb-13, 12:02 am)
பார்வை : 276

மேலே