அமெரிக்கா
மொத்த உலகின்
பச்சை நிறத்தைஎல்லாம்
விலைக்கு வாங்கிய தேசம்.
எல்லா வகையிலும் கிடைக்கும் கடன்களையெல்லாம்
அள்ளி அனுபவிக்கும் நாடு.
மஞ்சள் கடுதாசி கொடுக்க
மலைக்காத ஆலைகளை
பெற்ற தேசம்.
வாங்கிய வலை குறைவு
ஆனால் விற்கும் விலையோ
அநியாயம் என்ற வியாபார
நோக்குகொண்ட நாடு.
ராணுவ தளவாடங்களை
அதிகம் கொண்டதால்
அகிலவுலகையும் ஆட்சி
கொள்ளும் நாடு.
ஆண்ட சராசரங்களை ஆராய்ந்து
அறிவதினால் அறிவியலில்
முதன்மையான நாடு.
ஆனாலும் என்ன செய்ய,
கடன் மட்டுமே பெற்று
வரவில்லாமல் செலவு செய்து
சேமிப்பு அறியா காரணத்தினால் பொருளாதாரத்தில்
தோற்றுக்கொண்டிருக்கும் நாடு.
பெற்ற பேறு அனைத்தும் இழப்புத்தான்.