இலங்கை அரசிடம் இந்தியா கடுமையாக அணுக வேண்டும்.. மார்க்சிஸ்ட் ..! இப்பவாவது சொன்னீர்களே அய்யா...ஐயா..!

இலங்கை அரசிடம் இந்தியா கடுமையாக அணுக வேண்டும்.. மார்க்சிஸ்ட் ..! இப்பவாவது சொன்னீர்களே அய்யா...ஐயா..!

இலங்கை அரசிடம் இந்தியா கடுமையாக அணுக வேண்டும்.. மார்க்சிஸ்ட் ..! இப்பவாவது சொன்னீர்களே அய்யா...ஐயா..!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களை சேனல் - 4 என்ற தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொடூரமான கொலையே உதரானமாகும்..நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகக் கொடூரமான செயலை இலங்கை ராணுவம் நிறைவேற்றியுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களும், அதற்கு துணை போனவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பாண் கீ மூன் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்துள்ளது. ஆனாலும் விசாரணைக்கு இலங்கை அரசு தயாரக இல்லை.

இப்பிரச்சனையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு கடுமையான அணுகுமுறையே மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு கடுமையான நிர்பந்தம் கொடுக்கும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தமிழ் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆமாம் ....திடீரென்று ஏன் இவ்வாறு கூறுகிறது மார்க்சிஸ்ட் கட்சி...அவர்களின் தலைமை காரத் மற்றும் யெட்சுரி அவர்கள் ஒன்றுமே வாய் திறக்கவில்லையே...அது டெல்லி பாலிடிக்ஸ் இது தமிழ் நாட்டு பாலிடிக்ஸ் என்று இருக்குமோ...? பாரதிய ஜனதா கட்சி செய்கிறார்களே மாநிலத்திற்கு ஒரு பாலிடிக்ஸ் அதுபோல ஏன் நாமும் செய்யக் கூடாது என்று களத்தில் இறங்கியதைப் போல தெரிகிறது.

ஆக, பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் வந்திருக்கும் நேரத்தில் சேனல் - 4 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஏதோ ஒரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது..ஒருவேளை இலங்கை அரசோடு சேர்ந்து இந்திய அரசும் அதாவது மகிந்தாவைப் போல. காங்கிரஸ் கட்சியும் போர்க்குற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதை தகுந்த ஆதரங்களுடன் வெளியிடப்போகிறதா...? சனால் - 4 தொலைகாட்சி...அதற்கான ஒரு பேரமாக கூட இருக்கலாமோ..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்கேற்றார் போல டேவிட் காமரூன் அவர்களும் இந்திய பிரிட்டன் உறவுக்கு வானமே எல்லை என்று கூறுகிறார்..இதே பிரிட்டன் இன்னும் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிக் கொண்டிருக்கிறது...

வழக்கம் போல அல்ல வழக்கில் சொல்வார்களே...பிசினஸ் வேறு பிரண்ட்ஷிப் வேறு என்று அதுவாக இருக்குமோ..? சானல் - 4 வெளியிட இருக்கும் இந்தியாவின் போர்க்குற்ற ஆதாரங்களை தடுத்து நிறுத்தவும், அவ்வாறு தடுத்து நிறுத்தினால் என்ன தருவீர்கள்...? என்று ஒரு மூன்று நாள் டேரா போட்டு பல பத்தாயிரம் கோடிகளுக்கு (... அதாவது நெருக்கி ஒரு லட்சம் கோடிகள் என்று அர்த்தம்...)ஒப்பந்தங்களை போட்டு செல்வதற்கு வந்து இருப்பாரோ கமரூன்..? அவர்கள். அடுத்த பத்தாண்டுகளில் உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா தான் வளரும்...வளர்ந்து விடும் என்று வேறு மூட்டை மூட்டையாக அள்ளி விடுகிறாரே..? இதன் தொடர்ச்சியை வரும் செய்திகளை வைத்து பார்ப்போம்..எழுதுவோம்...!

ஆக, ஜி.ஆர். உண்மையிலேயே இந்திய அரசு ...இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதை வரவேற்போம்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (19-Feb-13, 5:04 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 137

மேலே