அது ஒரு நிலை...
காதலில்
தோல்வி
அது ஒரு நிலை...
அதற்குபிறகு
காதலர்களை விட...
அந்தகாதல்
வாழக்கூடும்
தோல்விக்கான
காரணங்கள்
ஆயிரம் இருக்கலாம்...
அத்தனையும்
காதலை
துண்டாக்குவதில்லை
காதலில்
ஜெயிப்பது
இடப்பக்கம் என்றால்
காதலில்
தோற்பது
வலப்பக்கம் எனலாம்
நானும், காதலும்
கயிற்றின் மேலே...
எந்தப்பக்கம்
விழுந்தாலும்
இயல்பாக இருத்தல்
நம்மை
பக்குவப்படுத்தும்...
காதலில்
தோல்வி
அது ஒரு நிலை...
நிறுத்தம் அல்ல...