நேசிப்பீர் வாழும் உயிர்களை

காணும் பசுமை அருமை
கண்ணில் பட்ட புதுமை
இன்றோ இந்த நிலை
நாளை மாறிடுமோ கை
வண்ணமும் மறைந்திடும்
வானுயரம் வளர்ந்திடும்
அறியா பயிரோ சிரிக்கிறது
புரியா நிலமோ திகைக்கிறது
விதைத்தவன் வாடிடுவான்
உழுதவனோ அழுதிடுவான்
விற்றவனோ மகிழ்ந்திடுவான்
எண்ணிடுவான் பெற்ற பணத்தை
விளை நிலமோ மறைகிறது
வீட்டு மனையாய் மாறுகிறது
விளைச்சல் நாளும் குறைகிறது
அரிசியின் விலையோ உயருது
நீடித்தால் இந்நிலை நாட்டிலே
நீண்டிடும் பட்டினிச்சாவு பட்டியல்
யோசிப்பீர் வாசிக்கும் உள்ளங்கள்
நேசிப்பீர் வாழ்ந்திடும் உயிர்களை !