இளைய நிலா ...

அடித்த காற்றினில்
ஆடிப்போன மேகமே ...
இனிய படைப்பாக
ஈன்ற எழுத்தன்னையே ...
உன்னை நேசிக்க
ஊடுருவும் மனலைகள் ...
எண்ணிய எண்ணங்கள் யாவும்
ஏற்றதுடன் பவனிவர ...
ஐயமில்லா அரவணைப்பை
ஒழுக்கத்துடன் நீ அணைக்க ...
ஓய்வில்லாது உன்னை நீ
வளர்ப்பதுவும் தேய்ப்பதுவும் கண்டு
என்னை நான் பறிகொடுத்தேன்
இனிய என் இளைய நிலாவே !
அன்புடன் ,
பாப்தமிழ்.