வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு...!

மொட்டைமாடி நிலா வெளிச்சத்துல மொக்கைப் போட்டுட்டே கூட்டாம்பீரு அடிக்கிற நேரத்துல...
கழுத்தறுத்து அவ போடும் கடலைக்குப் பதில் சொல்ல...
வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கு...!
தல படத்தை தியேட்டர்ல பார்த்து தாறுமாறா...
விசிலடிச்சுக் கொண்டாடும் நேரத்துல.,,
அவளுக்குப் பிடிச்ச மொக்கைப் படத்துக்குப்போய்
ரத்தக்கண்ணீர் சிந்த வேண்டியிருக்கு...!
என்னதான் சர்க்கஸ்காரர் மாதிரி சாகசமா
காதல் பைக்க அவங்க மனக்கூண்டுக்குள்ள ஓட்டினாலும்...
பிடிக்காத கலர்ல சட்டை போட்டதால...
டேஸ்ட் நாட் மேச்சிங்யானு சொல்லி...
பிரேக்அப் பண்ணி அடுத்த பைக்காரரை பிக்அப் பண்றாங்க...!
அதுக்குப் பின்னால...
நூலறுந்த காத்தாடியா தாறுமாறா திக்குத் தெரியாமப் பறந்து...
கடைசியா வீட்ல பாத்த பொண்ணுதான்
நம்ம குலவிளக்க ஏத்துறாங்க..
சுகமான சுமைகள் காத்திருக்கும் போது...
வீணான வேதனைகள் நமக்கெதுக்கு...?
வேணாம் மச்சான்.... வேணாம்... இந்த பொண்ணுங்க காதலு...!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (22-Feb-13, 11:55 am)
பார்வை : 404

மேலே