வாருங்கள்... உலகாளுவோம்.

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து வாழும் ஒரு நாடு என்றும் அடிமையாகவே இருக்கும் என்கிறான் அறிஞன் காரல் மார்க்ஸ்.

இன்றைய இளைஞர்கள் தன்னை பணத்திற்காக வெளிநாட்டுக்காரனிடம் விற்பதை பெருமையாக கருதுகிறார்கள். பெரும் தொழிலதிபர்களாக வாழ்ந்த எம் இனம் இன்று தொழிலாளர்களாக மாறிப்போனது தான் இதில் மறைக்கப்பட்ட உண்மை.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறியும் முன்னரே நாம் ரோம் நகரம் வரையிலும் வணிகம் செய்திருக்கிறோம். உலகின் எல்லா நாகரிகங்களும் நம்மிலிருந்தே உருவாகி இருக்கிறது. உலகில் மனிதன் தோன்றியது ஆப்ரிக்காவில் தான் என்றாலும், அவன் மனிதனாக வாழ கற்றுக்கொண்டது எம் மண்ணில் தான். நாம் என்றுமே பணத்தை பதுக்கியவர்கள் இல்லை; பங்கிட்டுக் கொடுத்தவர்கள்.

பணத்திற்கென முதன் முதலில் குறியீடு கண்டவர்கள் நாம் தான். சங்க காலத்திற்கு முன்னமே நம்மிடம் குறியீடுகள் இருக்கின்றன. நம் தமிழில் 25 இலக்கங்கள் (Digits) வரையிலும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் 10 இலக்கம் வரை மட்டுமே இருக்கிறது. இப்படிப்பட்ட பேரினம், நலிவடைந்து போனதற்கு நாமே காரணம்.

உங்களுக்கு தெரியுமா... உலகின் மிகப்பெரிய மூன்றாவது பேரரசை நிறுவிய அருண்மொழித் தேவனின் ( தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் இயற்பெயர் ) பேரப்பிள்ளைகள் நாம். அப்பேரரசு இன்றைய அமெரிக்காவை விட 5 மடங்கு பெரியது.

தகப்பன் பெயர் தெரியாது இருப்பது எப்படி இழிவோ அப்படித்தான் நம் வரலாறு தெரியாது இருப்பதும். நாம் உலகின் மூத்த குடிமக்கள். இந்த திமிர் வேண்டும் நமக்கு.

நான் உங்களை நாடாள அழைக்கவில்லை. வாருங்கள்... உலகாளுவோம்.

எழுதியவர் : (22-Feb-13, 5:01 pm)
பார்வை : 142

மேலே