பாவிகளை சுமக்கும் பாவையே-உலகம் நீதி பெற காத்திடு
சரித்திரம் சமைந்த
கலைமகளே!
பாவிகளை சுமக்கும்
பாரதக்கருவில்
ஏன் இந்த
அனாதைக்கோலம்?
அயராத ஒளிகள்
அணைந்து போனால்,
அகிலத்தின் விடியலில்
இருளிகள் பிரசவித்து
இடு காடுகள்
இறந் திடுமே!
பின்,
பாவிகளின் படைகள் யாவும்,
உன்
ஆவியைஅர்ப்பமாய்
அவிழ்த் திடுமே!
மாதுளை விலைபோல்
மாதுரி விலையால்
மாலைகள் யாவும்
மலரும் முன்னே
மாயுமே!
மணமேடை யாகமும்
மண்ணுக்குள்ளே
வேகுமே!
காமத்தின் விலைகள்
சாமத்திலே
ஆகுமே!
சுவரொட்டி படங்களே
உன் சுகம் பறித்து
போகுமே!
வேதத்தின் புரளிகள்
வெளிச்சத்திற்க்கு
வருமே!
காலத்தின் புரளிகள்
கதையளந்து
தருமே!
காற்றின் புகைப்படம்
ஒருநாள்
காட்சிக்கு வருமே!
காற்றிலும் தெரியாத
காட்சியாய்,
கலைமகளே
நின்
நிறையுடல்
திரைமறைவில்
தியானித்து தீருமே!
யாவையும்
மயானித்தஓசைகளால்
இம்
மானுடவியல்
மரணித்து ஆறுமே!
ஒரு நாள் உலகம்
நீதி
பெறுமே!அத்திருநாள் வரும்வரை
பாவிகளை சுமக்கும்
பாவமும்
ஆறிவருமே!