!!!எழுத்து தளத்தில் கவிதை திருட்டு!!!!!!

எழுத்து தளத்தில் கவிதை திருட்டு கண்டு அதிர்ச்சியடைந்தேன்.அதை என் எழுத்து தள நண்பர்களின் கவனத்திற்க்கு கொண்டு வரவே இதை எழுதுகிறேன்.
"உனக்காக அழுகிறேன்" என்ற தலைப்பில் நான் 16~2~2013 அன்று எழுதிய கவிதை "சென்ற மாதம் அதிகமாக பார்த்தவை" பகுதியில் முதலில் உள்ளது.
இந்த கவிதையை ஒரு வரி கூட மாற்றாமல் "உனக்காக என்றும்...." என்ற தலைப்பில் கவி Kஅரசன் என்பவர் 22~02~2013 அன்று தான் எழுதியதாக வெளியிட்டுள்ளார்.இவர்30~01~2013 அன்று உறுப்பினராகி 24 நாட்களில் 151கவிதைகள் எழுதி155புள்ளிகள் பெற்றுள்ளார்.மேலும் இது போன்று வேறு கவிதை திருட்டு நடத்தப்பட்டுள்ளதா என்றும் கண்டறிய வேண்டும்.எழுத்து தளத்திற்கு மின்னஞ்சல் முகவரிக்கு இது குறித்து புகார் அனுப்பியுள்ளேன்.நான் மிகவும் மதிக்கும் கவிஞர்கள்,ஆர்வமுடன் படிக்கும் அவர்களது படைப்புகள் இருக்கும் இத்தளத்தில் இது போன்றோர் இருப்பது அதிர்ச்சியும் கோபமும் தருகிறது.
எழுத்து தள நிர்வாகிகள் இது போன்றோர் மீது விரைந்து தகுந்த நடவடிக்கையும், இது போன்ற திருட்டை தடுக்கும் முறைகளையும் கொண்டு வர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

எழுதியவர் : கன்னியம்மாள் (24-Feb-13, 2:01 am)
சேர்த்தது : kanniammal
பார்வை : 149

மேலே