Manidha piravi
மனித பிறவி புழுவாய், பூச்சியாய், வித விதமான ஜந்துவும் ஆகி
நாற்கால் விலங்குமாகி, வாலில்லா குரங்குமாகி
இறுதியில் நாம் எடுத்துள்ளோம் மனித பிறவி
இதற்கு முன் நாம் எடுத்த பிறவிகள் பல கோடி
மனித பிறவி நமக்கு இறைவன் தந்த வரம்
அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் தர்மம்
காமம், கோபம், பேராசை, பொறாமை உட்பட பல தீய சக்திகள்
நாம் தினம் தினம் போராடும் கொடிய விரோதிகள்
அறிந்தோ அறியாமலோ நாம் செய்யும் தவறுகள்
அதன் விளைவால் அதிகரிக்கும் நம் கர்ம வினைகள்
தீமையை பேசாதே, தீமையை காணாதே, தீமையை கேட்காதே எனும் தத்துவம்
மூன்று குரங்குக்குள்ளேயே முடங்கிவிட்டதோ என்று சந்தேகம்
நான்மறை வேதங்கள் நமக்கு எடுத்து சொல்லும்
தீமையை மனதாலும் நினையாதே எனும் மகா பெரும் தத்துவம்
படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்
இது நாம் என்னேரமும் காணும் காட்சிகள்
மற்றவறை வருத்தாமல் நாம் இருப்போமெனில்
அதை விட சிறந்த தர்மமில்லை இவ்வுலகில்
நன்றி செலுத்துவோம் மானிட ஜன்மம் எடுத்ததற்கு
உறுதி கொள்வோம் உன்னதமாக நடப்பதற்கு.
தாமரைச்செல்வி -