இந்திய நண்டுகள்

ஒரு கப்பல்ல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்ப வேண்டிய விலங்குகளைப் அடைச்சு வெச்சு தயார் செஞ்சுட்டிருந்தாங்க. அதுல நண்டுகள் இருந்த ஒரு பாட்டிலை மட்டும் மூடாம அப்படியே விட்டு வெச்சிருந்தாங்க. இதை அந்தக் கம்பெனியில புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு ஊழியர் கவனிச்சுட்டார். அதெல்லாம் வெளிய ஓடிடுமே.. அப்றம் சட்ன்னு பிடிக்கவும் முடியாதே'ன்னு பாட்டிலை மூடி வைக்கிறதுக்காக தன்னோட மேலதிகாரி கிட்ட போய் உதவி கேக்க
மேலதிகாரி 'ஒண்ணும் சிரமப்பட வேணாம். அப்படியே விட்டுடு'ன்னார். தொழிலாளிக்கு ஒண்ணும் புரியலை, 'அப்படியே விட்டுட்டா அது ஓடிப் போயிடாதா?'ன்னு கேட்க்க உனக்கு சந்தேகமாருந்தா அந்தக் பாட்டிலை நல்லா கவனிச்சுப்பாரு என்றார் குழம்பிய தொழிலாளி பாட்டிலை பார்த்தார். அதுல ஒண்ணு மெதுவா மேல ஏறி வெளியே வரப் பாக்குது. பாதி வழி ஏறிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு நண்டு முதல் நண்டோட காலைப் புடிச்சு பாட்டிலுகுள் இழுத்துப் போடுது. இப்படியே தொடருது நடக்க. ஒரு நண்டு கூட பாட்டிலை விட்டு வெளியே வரலை. அப்போது மேலதிகாரி சொல்கிறார் அதெல்லாம் இந்தியாவுலயும் அதைச் சுத்தியிருக்கற கடற்பகுதிகள்லயும் பிடிச்ச நண்டுகள். ஏதாவது ஒரு நண்டு முன்னேற முயற்சி செஞ்சாலும், பக்கத்துல இருக்கற நண்டுகள் காலைப் பிடிச்சு இழுத்து அதை முன்னேற.. அதாவது பாட்டிலை விட்டு வெளியேற முடியாம செஞ்சுடும். இது அதுங்களோட இயற்கைக் குணம்.

'இந்தியர்களான நமக்கு நம்மில் ஒருத்தர் முன்னேறுனா பொறுக்காது'ங்கறதை சொல்றதுக்காக கட்டி விடப்பட்ட கதை இது. தனக்குத் தெரிஞ்சவங்களோட வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து எத்தனை பேர் உண்மையிலேயே மனசார சந்தோஷப்படறோம்? இது ஒரு கேள்விக்குறியாவே ஏன் எப்பவும் இருக்குது?.

எழுதியவர் : முத்துஜோ (25-Feb-13, 4:32 pm)
பார்வை : 383

மேலே