கண்ணே..! கண்ணுறங்கு ..!!

கண்ணே..! கண்ணுறங்கு ..!!
--------------------

உன்னை என்னில் ..
செதுக்கியவனை ..
நான் ..
செதுக்குகிறேன் ..!

வீதியில்..
உன் உறக்கமா..?
இது ..உன்
விதியல்ல..!என்
வாழ்க்கையின்
அவலம்..!

விரும்பினோம் ..
பாரதி கண்ட
புதுமை பெண்ணாக
வாழத்தான்..!

வழுக்கியே
போனோம்..உன்
வெட்டி ..
வீர பேச்சில்..,
இனியும் ..
உறங்கினால்..

நிறைந்துதான்
போகும் பூமி ..
உன்னால் ..
செதுக்கப் படும்
சிலைகளால் ..!

உறங்கியவள் ..
விழிக்கட்டும் ..-அவள்
ஏந்தும் ..உளி ..
உன்னை
வேரறுக்கட்டும் ..!

வேதனையோடு ..
அல்ல ...
இலட்சியத்தோடு ..!


*புதுமைப் பெண்ணாக
வெண்ணிலா *

எழுதியவர் : புதுமைப் பெண்ணாக (26-Feb-13, 11:45 am)
சேர்த்தது : Gvtha Vennila
பார்வை : 83

மேலே