கல்வியின் சிறப்பு
கல்வியின் சிறப்புச் சொல்லாக்
கவிஞரே இல்லை ; நன்கு
கல்வியைக் கற்ற வர்க்குக்
கருதிய இடங்கள் எல்லாம்
நல்லதே கிட்டும் என்று
நவின்றவர் பல்லோர் உண்டு .
கல்வியே அரணாய் நிற்கும் .
கடும் பகை கொண்டோர் கூடக்
கல்வியாம் அரணை என்றும்
கடுகுமே அழித்ததில்லை .
வல்லதோர் கருவி கல்வி.
வழித்துணை அதுவாய் நிற்கும் .
எல்லையில் சிறப்புக் கொண்ட
இத்தகைக் கல்வி தன்னைக்
சொல்லிய வண்ணம் கற்றுச்
சோர்வினைப் போக்கிக் கொள்க !!!!!!!!!