காலத்தால் கருகிய காதல்:-

காலத்தால் கருகிய காதல்:-

காணும் பூவைய ரனைவரையும் இதயம்
தன்னில் காதலால் யென்றுமிணைப்ப தில்லை . . .

தேனும் பாலும் விழியால் தரும் பாவையை
தன்னிதயத்தில் இணைத்து காதற் கருவாக்கி
பார்வைகளின் ஒளியுணர்வாள் விழுந்த விதையில்
உருவான காதற்கரு இப்பொழுதும் உள்ளதெப்படி?

ஓடும் கால ஒட்டத்தில் பழைய காதற்கரு
காலத்தால் முளைத்து வளரா யிருப்பினும்
மரத்துப்போன மனதுடன் நாட்களும் நகர
கல்வி, வேலை, மனைவி, பிள்ளையை காலமிணைக்குமே..

காதற்கரு கல்லரை சிலையாக மனதில் நிற்க
ஆணும் பெண்ணும் ஐபுலனச்சில் உழன்றாட
வானும் மண்ணும் பல்லாயிர நுற்றாண்டிங்கிருக்க
மூவாயிர நாட்களில் இளமை கழன்றோடுமே...

அர்த்தமின்றி யோடும் வாழ்க்கை பயணத்தில்
வந்தவர் சென்றவர் வரிசையில் நாமுமிணைய
காலத்தால் கருகிய யிந்த காதற்கரு
நினைவிருக்கும் வரை நினைப்பின் யென்றென்றும் சுகமே!

நன்றி

வணக்கம்.

வாழ்க வளமுடன்.

ரா.சிவகுமார்.

எழுதியவர் : ரா.சிவகுமார். (26-Feb-13, 4:51 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 254

மேலே