இது தான் காதலா... ?

கண்ணாடி முன் நின்று
கண்சிமிட்டி சிரிப்பதும் ,
கால் விரலில் கோலமிடுவதும்
விரல் நகங்களை கடிப்பதும்
தனக்குள் பேசியே
தன்னை மறந்து நடப்பதும்..
காபி பொடிக்கு பதில்
கார பொடியை கலந்து குடிப்பதும்
தலை கீழாக வைத்து
தலைசாய்த்து புத்தகம் புரட்டுவதும்
எதிலும் மனம் லயிக்காமல்
லாடம் கட்டா குதிரையாய் மனம் பறப்பதும்
பசித்தும் உணவை உண்ண
மறுப்பதும் ,வெறுப்பதும்
இரவில் உறக்கமிழந்து
இனியவனின் பொன்முகம் தேடுவதும்
கனவுகளிலே தன்னை தொலைத்து
பரிதவிக்க வைக்கும்
இதுதான் காதலா... ?
-PRIYA