உங்களுக்கு தெறியுமா? இந்த வரலாறு!!!!

செங்கீரை
அருள்மிகு ஸ்ரீ மீனாட்ச்சி அம்மன்

செங்கீரையில் கன்னிப்பருவம் அடைந்து 6 கன்னி மாதாக்களுடன் சேர்ந்து சப்தகன்னியாக காட்சி தந்து அருள் வழங்கும் ஸ்ரீ மீனாட்ச்சி அம்மன் மதுரையிலே சுந்தரேஸ்வரரை மணந்து ஸ்ரீ மீனாட்ச்சி சுந்தரேஸ்வர்ராக திருக்கோவில் கொண்டிருக்கிறாள்.
இன்றும் செங்கீரையில் மீனாட்ச்சி அம்மனுக்கு வருடா வருடம் சித்திரை மாதம் முதல் வாரம் செவ்வாய் கிழமை அன்று இரவு பொங்களிட்டு கன்னிச்சடங்குகள் அனைத்தும் நடைபெறுகிறது.
இந்த சடங்கு நிகழ்ச்சிக்காக செங்கீரை ஊர்மக்கள் அனைவருமே தை மாதம் பொங்கல் திருநாளுடன் சங்கு முழங்கி மேளதாளத்துடன் நடைபெறும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் செய்வதில்லை. மேலும் இறப்புகளுக்கும் கூட தாரை முழக்கம் கிடையாது.
தை, மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களுக்கு பிறகு சித்திரை மாதம் பிறந்தவுடன் அசைவ உணவுகளையும் தவிர்க்கின்றனர், பிறகு இந்த மாதம் வரும் முதல் வெள்ளி அன்று மீனாட்ச்சி அம்மனுக்கு காய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காய் வெட்டுதல் என்பது அம்மனுக்கு படைப்புக்கு முக்கியமான பலாபழம் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை கொண்டுவந்து செங்கீரையில் உள்ள ஒரு சிவன் கோவிலில் அம்மனுக்கான அறை ஒன்றில் வைக்கப்படுகிறது.
அன்றிலிருந்து ஐந்தாவது நாள் செவ்வாய் கிழமை அன்று காலையில் செங்கீரையில் வடக்குத்தெரு பங்காளி ஆண்மகன்கள் அனைவரும் மீனாட்ச்சி அம்மன் ஆலயத்திர்க்கு சென்று அம்மனுக்கு பச்சை ஓலை கூடாரம் அமைத்து இரவு படைப்பிற்கு தேவையான அனைத்து ஏர்ப்பாடுகளையும் செய்கின்றனர். பெண்களும் பொங்களுக்கு வேண்டிய அரிசியை புதுநெல்லை உரலில் இட்டு இடித்து தயார் செய்கின்றனர்.
அன்று இரவு 8 மணிக்கு வடக்குத்தெரு ஸ்ரீவெள்ளச்சிஅம்மன் ஆலயத்திலிருந்து குளவு சத்த்த்துடன் மீனாட்ச்சி அம்மன் ஆலயத்திற்கு படைப்பு எடுத்துச் செல்கின்றனர்.
படைப்பு ஆலயத்தை அடைந்த்தும் சிறப்பு புண்ணியதானம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகமும் நடைபெறுகிறது, இதன் பிறகு அம்மனுக்கு படைப்பு பொங்கள் மண்பானையில் பால் பொங்களாக வைக்கப்படுகிறது.இதன் பிறகு பெண்கள் அனைவரும் அம்மனுக்கு பொங்கலிடுகின்றனர்.
இன்றும் இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகர்ணங்களும் மண்பாண்டங்கள் என்பது இந்த ஆலயத்தின் பழைமயை உணர்த்துகிறது.
இதனிடையே அம்மனுக்கு அலங்காரம் மற்றும் ஆலய தோறண அலங்காரங்கள் அனைத்தும் இனிதே நடைபெருகிறது, அம்மனுக்கு மரிக்கொழுந்து மற்றும் மல்லிகை மலர்களால் மட்டுமே அலங்காரம் செய்யப்படுகிறது, அம்மன் பச்சை ஓலை கூடாரம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலர் பந்தலாக காட்சியளிக்கிறது.
அதிகாலை 3 மணிக்கு மேல் பெண்களின் குளவு ஆராவாரத்துடன் அம்மன் கூடாரத்தின் நுழைவாயில் திறக்கப்பட்டு தீபஆராதனையுடன் 6 கன்னி தெய்வங்களுடன் சேர்ந்து சப்தகன்னியாக மீனாட்ச்சி அம்மன் காட்சி தருகிறாள்.
வருடத்தில் ஒரு நள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காட்சிதந்து மக்களை காத்தருளும் கன்னிதாயே எங்கள் மீனாட்ச்சி அம்மா’ உன் பாதம் பணிந்தே நாங்கள் வாழ்கிறோம்.

சுப.செந்தில்நாதன்
செங்கீரை
புதுக்கோட்டை மாவட்டம்

எழுதியவர் : சுப.செந்தில்நாதன், செங்க (28-Feb-13, 11:52 am)
பார்வை : 174

மேலே