சொல்லும்முன்னே யோசிப்பாயா?

சொல்லும்முன்னே யோசிப்பாயா
சொன்னசொல்லை

அது என்னை
கொல்லும்படி போதிப்பாயா

சொல்லாமல் முறைத்திருந்தால்
சோகமில்லை

எனைவந்து
கிள்ளாமல் மறைந்திருக்கும்

நீ சொன்னசொல்லால்
ஆன காயம் ஆழமடி

அது ஆற ஆண்டு
நூறெனக்கு வேண்டுமடி

காயம் ஆறும் காலம் மாறும்
காதல் சாகாது

அந்த காயம் தந்த தழும்பால்
இந்த கட்டை வேகாது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Mar-13, 8:18 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 214

மேலே