அச்சம் தவிர்
வெற்றியின் மகத்துவத்தை தோற்றவனிடத்தில் கேள்.தோல்வியின் வலியை வென்றவனிடத்தில் கேள்.வாழ்க்கை எனும் நீண்டப்பயணத்தில் தினமும் புதிய அனுபவங்கள்.அனுபவங்கள் கற்றுத்தரும் பாடம் வாழ்க்கைக்கு ஆதாரம்.வெற்றிப்பாதை பூக்களால் அல்ல கற்களால் நிரம்பியிருக்கிறது.வெற்றி என்பது தோல்வியடையாமல் இருப்பதில்லல்ல.தோல்விகளின் அனுபவங்களால் நாம் தெரிந்துக்கொள்ளும் வெற்றிக்கான ரகசியங்களில் இருக்கிறது.எதை நோக்கி உன் பயணம்.வெற்றியின் விளிம்பில் கூட தோல்வி காத்துநிற்கும்.இறுதிவரை விழித்திரு.உன் கண்கள் ஒளி இழக்கும் முன் உன் இலக்கைத்தொடு.மனதில் குழப்பங்கள், வெற்றிக்கு தடைக்கற்கள்.தன்னம்ப்பிக்கை இருந்தால் தரணியை வெல்லலாம்.அச்சம் தவிர்.