விழியோரம் வரும்நீர்!........

மனதிற்குப் பிடித்த ஒருவர்
உண்மையான அன்போடு
உடலைத் தழுவி,
மனதைத் தொடும்போது...

உணர்வான வரிகள்
அற்புதமான பாடலாக
நெஞ்சம்தொடும் இசையோடு
உயிருக்குள் புகும்போது...

கனவான பெரும் கற்பனைகள்
எதிர்பாராத தருணத்தில்,
அதிசயமாய் நடந்திடும்போது...

இழந்துவிட்டோம் என்று
மறந்துவிட்ட ஒன்று
மீண்டும் கிடைக்கும்போது...

நேசமிகு நண்பனோ
உயிரான சிலஉறவுகளோ
பிரிந்த வலியில் துடித்திட,
உண்மையான அன்புவார்தைகள்
நெஞ்சுக்குள் புகுந்து
உயிரைத் தொடும்போது...

விழியோரம் வரும்நீர்!
வழிந்திடும் சில துளிநீர்!
அது அன்பின் நீர்!
அதுவே, அன்பிற்கு நீர்!..

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (2-Mar-13, 9:56 pm)
பார்வை : 442

மேலே