அகக்கண்ணாடி

அகக்கண்ணாடி

காலை உன் வரவுக்காய்
காத்திருக்கும் தவிப்புகள்

தேடுகின்ற இடமெல்லாம்
உன் பெயர் தென்பட்டுவிடாதா,,,!!
என்பதைபோல்

உடைந்த என் ஊக்கத்திற்கு
உந்துதலாய் உன் விரலெழுதும்
கவிதைகள் தேடுகின்ற என்விழிகள்

புரிந்தும் விலகிநின்று
வலி கொடுக்கும்
சிலமௌனங்கள்

கேட்டுவிட நினைத்தும்
ஏதோதுளி நெருடல்கள்,,,

விரிசல்கொண்ட மனதில்
மேலும் இடைவெளிகளை
அதிகமாக்கிவிடாதா என்று,,,,

விலகிக்கொள்ள விரைந்தும்
விசையாலடித்திழுக்கும்
ஞாபகங்கள் என்னசொல்ல

குரங்குமனம் என்பது சரிதான்
என்பதைபோல்
மறுபடி யோசிக்கவைக்கும் அன்பு
காரணமற்றதாகி விடுமோ,,,,!!!

விழுந்து விழுந்து கெஞ்சிவிடவும்
தடுக்கும் மனம்
விலகிப்போ என்று
சொல்லிவிடவும் மறுக்கிறது

தண்டனையில் கொதித்தும்
எதிர்ப்பார்ப்புகள்,,,,

என்றாவது வந்து
என் இத்தனை செயல்களும்
ஒரு நாடகந்தான் என்று
சொல்லி விடமாட்டாயா என்று,,,

உன் வசையடிகளை
தாங்கிக்கொள்ளும்
என் இறுமாப்பு
இன்றுன் மௌனத்தீயில்
கருகுவதும் ஏனோ,,,,

தோழமை தோள்கொடுக்கவில்லை
என்று கேட்கவில்லை நான்
இருந்தும் உன்னை
இழக்க ஏனோ விரும்பவில்லை

என் வருடிய பேச்சுக்களாலும்
உன் இதயம் வலிகொள்வதை
பொறுக்கமுடியாதவனாய் நான்,,,,

உன் மௌனத்தீயில்
என்னை மொத்தமாய்
இழந்துவிடுகிறேன் உயிர்நட்பே,,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (3-Mar-13, 7:55 am)
பார்வை : 243

மேலே