உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை?
ஜஸ்லாந்து நாட்டில் லஞ்சம் வாங்கினால் தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலை. அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும்.
எகிப்து நாட்டில் லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். உள்ளே கடுமையான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
அர்ஜெண்டினா நாட்டில் லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய் விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.
செக் குடியரசில் லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனையுடன் வேலையும் காலி. வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
நைஜர் நாட்டில் லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.
இங்கிலாந்து நாட்டில் லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.
சீன நாட்டில் லஞ்சம் வாங்கினால் கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச்
சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.
இந்தியாவில் அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே. உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக, அன்பளிப்பாக வாங்கினால் அபராதம் மட்டுமே உண்டு.
அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!! என்கிறது ’தமிழர்களின் சிந்தனை களம்’ என்ற இணையதளம்.
ஆதாரம்:’தமிழர்களின் சிந்தனை களம்’