நேசம்

நேசம்

நேசித்து பார்
உம்மை சுற்றி வாழ்பவர்களை
உண்மையான நேசம்
யாரையும் காயபடுத்தி பார்க்காது
தூய நேசத்திற்கு தேச பாகுபாடுகள் தெரியாது
நேசகள் குறைவதால் தான்
வன்முறைகள் பெருகுகின்றன
யுத்தங்கள் வெடிக்கின்றன
மனித நேயங்கள் மறைகின்றன
வஞ்சக செயல்கள் நடக்கின்றன
அறசெயல்கள் குறைத்து
தீய செயல்கள் தலை விரித்து ஆடுகின்றன
எனவை நேசித்து பழகு
பிறர் செய்யும் குறைகள்
தவறாக தெரியாது
நேசிப்பது குறைவதால் தான்
குற்றங்கள் பெருகுகின்றன
உன்னை போல் பிறரை நேசி
இன பாகுபாடுகளை களைந்து
வளமான உலகம் படைப்போம்
அன்பு என்னும் ஆயுதம் கொண்டு

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணperumal (4-Mar-13, 12:05 pm)
சேர்த்தது : sridevisaravanaperumal
பார்வை : 163

மேலே