காதலின் சக்தி

கடலென்னும் காதலனை தேடி
மலையிலிருந்து
மட்டற்ற மகிழ்ச்சியுடன் பாடி
அருவியாய் ஆற்றாமையுடன்
குதித்தோடும் காட்டாறே !

உனக்குத் தான் திக்கெங்கிலும்
எத்தனை தடைகள்….. தடுப்பணைகள்…..
வழியில் உள்ளவர்களின்
மனதை உன் கொண்டு நிரப்பியும்

பலர் உன்னை நேசித்தும்
பணம் கொண்டு யாசித்தும்
நீ கொண்ட முயற்சியிலிருந்து
ஒரு நொடி கூட தவறியதுமில்லை
தாமதித்ததும் இல்லை !

நொடி உன்னை
தாமதிக்க வைத்திடில்
உன் ஆக்ரோஷம்
கட்டறுந்த மத யானை போல
களோபரம் செய்து களியாட்டம் நடத்தும்
உன் கண் லீலைகளை
யாராலும் தாங்க முடியாது

மீறி உன்னை தன்னுள்
அடக்க நினைப்பவர்களை
தன்னுள் அடக்கிவிட்டு தன்
காதலனை கரம் பிடிக்கும்
அற்புத சக்தி கொண்டவள் நீ…

எழுதியவர் : bhanukl (4-Mar-13, 4:45 pm)
Tanglish : kathalin sakthi
பார்வை : 180

மேலே