தடையிலா மின்சாரம் எப்போது ?

விலையிலா பொருட்கள் உண்டு
தடையிலா மின்சாரம் இல்லை !

இரவும் பகலும் பாரினில் உண்டு
இருநேரமும் மின்சாரம் இல்லை !

விண்ணிலோ மின்னிடும் மீன்கள்
மண்ணிலோ மின்சாரம் இல்லை !

விந்தைமிகு விஞ்ஞான வளர்ச்சி
வியத்தகு வேகத்திலோ உலகம் !

விண்வெளியில் வீரநடை அங்கே
மின்தடையோ நாளும் இங்கே !

தேர்தல் நேரத்திலோ ஒளிர்ந்திடும்
தேர்வுகள் காலத்திலோ இருண்டிடும் !

இருளிலே தவித்திடும் தமிழகமும்
விடியலைக் காண்பதுதான் எப்போது ?

விளக்கொளியில் படித்திடும் இவர்கள்
மின்னொளியில் வாசிப்பதுதான் எப்போது ?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Mar-13, 8:39 am)
பார்வை : 105

மேலே