நம்பாதீர்!நம்பாதீர்!..

அதிகம் பேசுகிறவர்களும்,
அழகாகப் பேசுகிறவர்களும்,
வித்தை பயின்றவர்கள்.--அதனால்
எளிதில் எவரையும்-
ஏமாற்றி விடுவர்.

ஊமைக் கள்ளனும்,
ஊமைக் கள்ளியும்,
ஒன்றுமே பேசமாட்டர்.-ஆனால்..
உலக விஷயங்கள்-
அனைத்தும் அறிவர்.

எதையும் அறியாமலும்,
எதிலும் ஒட்டாமலும்,
ஒதுங்கியே இருப்பர்-அவரே
ஊரையே கெடுக்கின்ற-
உலகமகா வில்லர்.

இப்படி விதவிதமான
வேடதாரிகள் இருப்பர்.
பழகினாலும் புரியாது-இவர்
கண்ணுக்குப் புலப்படாத-
கிருமிகள்!- உஷார்!.

அனுபவம் காட்டாத,
அடையாளம் விளங்காத,
யாவரும் அந்நியரே-அவரை
வேடிக்கைக்குங் கூட-
நம்பாதீர்!நம்பாதீர்!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (5-Mar-13, 8:43 am)
பார்வை : 103

மேலே