ஆன்ம நேயம் வளர்ப்பது சமயங்களே
மனிதனை உயர்த்தும் மார்க்கமே சமயம்
தனியருள் பெற்ற தவமுடைச் சீலர்
இனியநல் இதயத் தெளிவுடன் உணர்ந்து
இயற்றிய நெறிபல பயிற்றினர் நமக்கே '
எத்தனை அழுக்கோ ஏறிய வகையில்
சித்தம் இடறிச் சிதறிய மனிதன்
நித்தமும் வாழ்வில் தத்தளிப் புடனே
இத்தரை மீதே இடர்பாடு கின்றான்
வறுமை ஒருபுறம் வதக்கிக் கொல்ல
சிறுமை ஒருபுறம் சிறப்பெலாம் அழிக்க
ஆசை ஒருபுறம் அமைதி கெடுக்க
நீசர் உறவால் நேர்மை சிதையப்
பூசல் மிகுந்த பூமியில் புழுவாய்க்
கூசிக் கூசி குனிந்து நெளிந்து
வாசமே இல்ல வகையே வாழ்கிறான் ;
நண்பனை நசுக்க நினைப்பான் அவனே
நல்லுரவ தனைக் கெடுப்பான் அவனே .
வசையுறு மதுவிற்கு இசைவான் அவனே .
அழுக்காறு அனனத்து அன்புச் சொத்து .
இழுக்கே அவனுடை இன்பம் ஆகும் .
பணத்திற் காகக் கோணத்தை இழப்பான்
குணமே பெரிதென கொள்ள மாட்டான்
கலப்படம் அவனது கலையை நிற்கும் .
இலஞ்சம் பெறவோ வஞ்சனைக் காட்டன்
பஞ்சமே இவனது நெஞ்சில் நிற்கும் .
இத்தனைப் போக்கும் எத்தனைக் காலம் ?
இத்தரை வாழ்வோ நித்தியம் இல்லை .
ஆடியும் ஓடியும் அடங்கிய பின்னர்
கூடும் அமைதியை கொடுப்பது சமயம் .
சமயம் இன்றேல் சமரசம் இல்லை
சமயம் இன்றேல் ஆன்மீகம் இல்லை .
சமயம் இன்றேல் நேயம் இல்லை .
பதறிய மனதில் பக்குவம் தந்து
மதமே காக்கும் மற்றது இல்லை !
(இப்பாடல் 'ஆசிரியப்பா 'வகையைச் சார்ந்தது )