நான் எனும் நான் எங்கே ???

என்னைப் போல
எத்தனையோ ஜீவன்களின்
இதயத் துடிப்பிற்க்கு வார்த்தை சொல்ல நாவிருந்தால் அவை பாடும் அழுதழுது
பல பாக்கள் இங்ஙணம் .....

இன்னும் சில மனுக்கள்
என் உறவுகளிடம்
எத்திவைக்க என் மனம் துடிக்கிறது
நீங்களும் உணருங்கள்
நீங்கள் என்னுறவாய் இவ்விடத்தில்

நீங்களொரு கடவுளாய் இருப்பின் ....................
படைத்தாலும் படைத்தாய் ஏன் பெண்ணாய் படைத்தாய் - இதில்
தாய்க்கு
தலை மகளையும் கூட
எரிகிற நெருப்பில்
எண்ணெய் அள்ளி ஊற்றும் சீலம்

நீங்களொரு தந்தையை இருப்பின் .................
பெற்றது நீங்கள் - இதில்
பிழை என்ன உள்ளது - என்னில்
குத்தம் சொல்லிக்கொண்டிருக்கும்
நீங்களெல்லாம் என்ன
உத்தம சீலர்களா - உங்கள்
மனசாட்சி சொல்லும் உங்கள்
மனதின் கோலம் என்னவென்று ..!?

நீங்களொரு தாயாக இருப்பின் .....................
நீயுமொரு பெண் தானே - என் கவலை
எங்கணம் அறிவாய் ...
நான் ஒரு பெண்
படிக்கவும் வேண்டும் ,
வீட்டில் பனி புரியவும் வேண்டும் - இங்ஙணம்
ஏன் வயசுக்கும் மனசுக்கும்
ஆசைகளென்ன வரக்கூடாதா
இல்லை அது எனக்கென்ன
விலக்கப்பட்டுள்ளதா

நீங்களொரு சகோதரியாய் இருப்பின் ...........
கெஞ்சிக் கேட்க்கிறேன்
உங்களிடம் - என்னைப்
பார்த்து எதுவும் பழகிக்கொள்ளாதீர்கள் - நம் பெற்றோர்களிடையே - நான் ஒரு
கேவலமான ஜீவன்
நீங்களும் என்போல
எந்நேரமும் ஏச்சுக்கள்
வாங்கலாம் - என்னுடன்
முடியட்டும் இந்நிலை

இன்னும் நீங்களொரு சகோதரானாயின்........
உனக்கு நம் வீட்டில்
அதிக மதிப்பு ஏனெனில் - நீ
ஆண் பிள்ளையாம் உழைப்பவனாம் - நீ
அதனால் - வீட்டில் உயர்ந்த இடம் உனக்கு பெற்றோர்களே பணத்தை வைத்து தரமிடும் போது மற்றோர் என்னை எங்கே மதிப்பர் என்னை ?

இன்னும் நீங்களொரு தோழியாக இருப்பின் ..........
பிரிவு என்பது உனக்கு
பிடித்தமான மொழியா
விலகிச் சென்றது விட்டாய்
எங்கோ தொலைவில்
உன் உயர்கல்விக்காய்
என்னை விட்டுவிட்டு - இதிலும்
உனக்கும் எனக்கு ஒப்பீடு வேறு அதிலும் - நீதான் உயர்ந்தவளாம் என் வீடே சொல்கிறது


இத்தனை
நச்சரிப்புகளுக்கும்
நடுவில் -
நான் எனும் நான்
எங்கனம்
நானாய் இருப்பேன் ........?

எழுதியவர் : ரொசானா ஜிப்ரி (5-Mar-13, 4:24 pm)
சேர்த்தது : ரோஷானா ஜிப்ரி
பார்வை : 84

மேலே